Friday, March 22, 2019

விளையாட்டில் அரசியல் ; அதிரடி ஆட்டம் ஆடும் விஜய் 63 : கதை இதுதான்!

விளையாட்டில் அரசியல் ; அதிரடி ஆட்டம் ஆடும் விஜய் 63 : கதை இதுதான்!


அட்லீ இயக்கத்தில் விஜய் நடிக்கும் புதிய படத்தின் கதை வெளியே கசிந்துள்ளது.

நடிகர் விஜய் தற்போது அட்லியின் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் நயன்தாரா, கதிர் உள்ளிட்ட பலரும் நடிக்கிறார்கள். மேலும், இப்படத்தில் வில்லனாக பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராப் நடிக்கவுள்ளார்.

இப்படம் தொடங்கும் போதே கால்பந்து பற்றிய கதை.. கால்பந்து பயிற்சியாளராக விஜய் நடிக்கிறார் என்கிற தகவல் கசிந்தது. இதைப்படக்குழுவும் மறுக்கவில்லை.

இந்நிலையில், இப்படத்தின் கதை வெளியே கசிந்துள்ளது. சமீபத்திய விஜய் படங்களை போலவே இப்படமும் அரசியலையே பேசுகிறது. விளையாட்டில் உள்ள அரசியலை இதில் டீல் செய்துள்ளனர். அதேபோல், அட்லியின் வழக்கமான பழி வாங்கல் சமாச்சாரமும் இதில் உண்டு.

விஜயும், கதிரும் கல்லூரி நண்பர்கள் மற்றும் கால்பந்து விளையாட்டு வீரர்கள். கால்பந்து விளையாட்டில் இந்தியாவை உலக அளவில் தலை நிமிர செய்ய வேண்டும் என்பதே இருவரின் லட்சியம். ஒரு கட்டத்தில் இருவரும் பயிற்சியாளராக மாறுகிறார்கள்.

அப்போது இரு அணிகளுக்கிடையே ஏற்படும் மோதலில் கதிர் கூலிப்படையால் கொலை செய்யப்படுகிறார். அதன் பின் உள்ள அரசியல் சதி விஜய்க்கு தெரிய வர , கொதித்தெழுந்து நண்பனின் லட்சியத்தை நிறைவேற்றுவதோடு, நண்பனை கொலை செய்தவர்களை விஜய் பழிவாங்குவது போல் கதை அமைக்கப்பட்டுள்ளதாம்.

நண்பர் கதிர் உருவாக்கிய அணியை வெற்றி பெற வைக்க விஜய் சந்திக்கும் சவால்கள், அதற்கு பின்னால் இருக்கும் அரசியல் ஆகியவற்றை விஜய் எப்படி முறியடித்து பயிற்சியாளராக வெற்றி பெற்றார் என்பது திரைக்கதை ஆக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
எனவே, விஜய் ரசிகர்களுக்கு இப்படம் மாபெரும் விருந்தாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.
சீனாவிடமிருந்து மேலும் 176,100 கோடி ரூபாய் கடன்!

சீனாவிடமிருந்து மேலும் 176,100 கோடி ரூபாய் கடன்!


மத்திய அதிவேக நெடுஞ்சாலைத் திட்டத்துக்காக, 176,100 கோடி ரூபாய் இலகு கடனை வழங்கும் உடன்படிக்கையில் சீனாவும், இலங்கையும் கைச்சாத்திட்டுள்ளன.

நிதி அமைச்சில் இன்று நடைபெற்ற நிகழ்வில், அமைச்சின் செயலாளர் சமரதுங்கவும், சீன எக்சிம் வங்கி சார்பில் இலங்கைக்கான சீனத் தூதுவர் செங் ஷியுவானும் இந்த உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளனர்.

மத்திய அதிவேக நெடுஞ்சாலைத் திட்டத்தின் முதற்கட்டமான, கடவத்த தொடக்கம் மீரிகம வரையான பகுதியில் பணிகளை மேற்கொள்வதற்கு 1.164 பில்லியன் டொலர் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

சீனாவின் எக்சிம் வங்கியின் மூலம் இந்தக் கடன் வழங்கப்படவுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.
யாழ்.அல்லைப்பிட்டி விபத்தில் இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு!

யாழ்.அல்லைப்பிட்டி விபத்தில் இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு!


யாழ்ப்பாணம் , அல்லைப்பிட்டி – ஊர்காவற்றுறை பிரதான வீதியில் இடம்பெற்ற டிப்பர் – மோட்டார் சைக்கிள் விபத்தில் இளம் குடும்பத்தலைவர் ஒருவர் உயிரிழந்தார்.

இந்தச் சம்பவம் இன்று மாலை இடம்பெற்றதாக ஊர்காவற்றுறை பொலிஸார் தெரிவித்தனர்.

அளவெட்டி கிழக்கைச் சேர்ந்த நிதர்ஷன் (வயது-21) என்பவரே உயிரிழந்தார்.

மோட்டாா் சைக்கிளில் வந்த இளம் குடும்பத்தலைவர், டிப்பா் வாகனத்துடன் மோதி விபத்து இடம்பெற்றது என்றும் படுகாயமடைந்த இளைஞன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் போது உயிரிழந்தார் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.யாழ். மானிப்பாய் மருதடி விநாயகர் ஆலய கொடியேற்றம்! (Video)

யாழ். மானிப்பாய் மருதடி விநாயகர் ஆலய கொடியேற்றம்! (Video)


வரலாற்று சிறப்பு மிக்க யாழ் மானிப்பாய் மருதடி விநாயகர் ஆலயத்தின் மஹோற்சவ கொடியேற்றம் இன்று(22.03.2019)  வெகுவிமர்சையாக இடம்பெற்றது.

தொடர்ந்து 25 தினங்கள் திருவிழாக்கள் இடம்பெறும்.

எதிர்வரும் 31ஆம் திகதி மஞ்சத் திருவிழாவும் அடுத்த மாதம் 13 ஆம் திகதி சப்பரத் திருவிழாவும், மறுநாள் 14ஆம் திகதி தேர்த் திருவிழாவும், 15ஆம் திகதி தீர்த்தத் திருவிழாவும் இடம்பெறும்.

யாழ். வண்ணை வைத்தீஸ்வரர் ஆலய தேர்த்திருவிழா!

யாழ். வண்ணை வைத்தீஸ்வரர் ஆலய தேர்த்திருவிழா!


ஈழத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க சிவ தலங்களில் ஒன்றான யாழ்ப்பாணம் வண்ணை ஸ்ரீமத் வாலாம்பிகா சமேத ஸ்ரீ வைத்தீஸ்வரர் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் பஞ்சரத பவனி, 20.03.2019 அன்று காலை பக்திபூர்வமாக நடைபெற்றது.
இலங்கையில் செயற்கை மழை பொழிய வைக்கும் திட்டம் வெற்றி!

இலங்கையில் செயற்கை மழை பொழிய வைக்கும் திட்டம் வெற்றி!


இலங்கையில் செயற்கை மழையை பொழிய வைக்க முதன்முறையாக முன்னெடுக்கப்பட்ட திட்டம் வெற்றியடைந்துள்ளது என மின்சக்தி அமைச்சு அறிவித்துள்ளது.

மவுஸ்ஸாகலை நீர்த்தேகக்க பகுதிகளில், இன்று முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகளில் சுமார்  45 நிமிடங்கள் மழை பெய்ததாக அமைச்சுக் குறிப்பிட்டுள்ளது.

மவுஸ்ஸாகலை நீர்த்தேகக்க பகுதிகளில் இன்று சுமார் 8 ஆயிரம் அடிக்கு மேலெழுந்த விமானப்படையின் வை-12 விமானம் மேகக் கூட்டங்கள் மீது இராசயனயத்தை தூவி செயற்கை மழை பொழிவை உருவாக்கியது. இதன் மூலம் சுமார் 45 நிமிடங்கள் மழை பெய்ததாக விமானப் படை அதிகாரி தெரிவித்துள்ளார்.

இலங்கை மின்சார சபையின் அழைப்பின் பேரில் வருகை தந்திருந்த தாய்லாந்து செயற்கை மழை வல்லுனர்கள், இந்த திட்டத்துக்கான தொழில்நுட்ப உதவிகளை வழங்கியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
வீதியோரம் குளிர்பானம் விற்பனை செய்யத் தடை!

வீதியோரம் குளிர்பானம் விற்பனை செய்யத் தடை!


வீதி­யோ­ரங்­க­ளில் உள்ளூர் உற்­பத்­தி­க­ளான சர்­பத் மற்­றும் ஜூஸ் வகை­களை விற்­பனை செய்­வ­தற்குத் தடை விதிக்­கப்­பட்­டுள்­ளது. மீறு­வோர் மீது சட்ட நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டு­மென சாவ­கச்­சேரி சுகா­தா­ரத் திணைக்­க­ளத்­தி­னர் அறி­வித்­துள்­ள­னர்.

தற்­போ­தைய வெயில் காலத்­தில் வீதி­யோ­ரங்­க­ளில் செல்­வோர் நலன்­க­ருதி பலர் உள்ளூர் தயா­ரிப்­பான சர்­பத் மற்­றும் ஜுஸ் வகை­களை விற்­பனை செய்து வரு­கின்­ற­னர்.

இத­னால் நோய்­கள் பர­வக்­கூ­டிய அபா­யம் உள்­ள­தால் அவ்­வாறு உள்ளூர் தயா­ரிப்­பு­களை வீதி­யோ­ரங்­க­ளில் விற்­பனை செய்­வதை நிறுத்­து ­மா­றும் தவ­றின் அவர்­கள் மீது சட்ட நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டு­மெ­ன­வும் அறி­வித்­துள்­ள­னர்.
உடுவில் மகளிர் கல்லூரி தொடர்பான உண்மைக்குப் புறம்பான செய்தி - அதிபர் மறுப்பு!

உடுவில் மகளிர் கல்லூரி தொடர்பான உண்மைக்குப் புறம்பான செய்தி - அதிபர் மறுப்பு!


யாழ்ப்பாணம்   உடுவில் மகளிர் கல்லூரி மாணவி பாடசாலை விடுதியில் இருந்து வெளியேறியமை தொடர்பாக உண்மைக்குப் புறம்பானது என அதிபர் திருமதி பி.எஸ்.ஜெபரட்ணம் தெரிவித்துள்ளார்.

கல்லூரி தொடர்பில் உண்மைக்கு புறம்பான  செய்தியை  சில ஊடகங்கள் பிரசுரித்தமையிட்டு மனம் வருந்துவதாக மேலும் குறிப்பிட்ட அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டு கீழ் கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அதாவது எனது பாடசாலை விடுதியில் இருந்து வெளியேறிய மாணவி  நேற்று (21.03.2019) பரீட்சை நடைபெறவுள்ளதால் அதனை தவிர்த்துக் கொள்ளும் முகமாக இவ்வாறான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்.

குறித்த மாணவி  மருத்துவக் காரணத்திற்காக விடுமுறையில்  வீட்டில் நிண்று மீண்டும் புதன்கிழமை  (20.03.2019) அவரின் பெற்றோரால் விடுதிக்கு அழைத்து வரப்பட்டார் பாடசாலை நுழைவாயிலில் வரும் போதே  மாணவி வீடு செல்ல எத்தனித்துள்ளார். ஆயினும் பெற்றோரின் வேண்டுகோளுக்கு இணங்க அவர் மீண்டும்  விடுதியில் அனுமதிக்கப்பட்டார். அதற்குப் பின்னரே அவர் விடுதியை விட்டுத் தவறான முறையில் வெளியேறியிருந்தார். இருப்பினும் நாம் முறைப்படி அவரைப் பொறுப்பேற்று ஒழுங்கான விதிமுறைகளின்படி அவரின் தாயாரிடம் ஒரு கடிதத்தைப் பெற்று மீண்டும்  தாயாரிடமே மாணவியை ஒப்படைத்தோம்.

உண்மை நிலைவரம் இவ்வாறிருக்க ஆதாரமற்ற உண்மைக்குப் புறம்பான செய்திகள் அம் மாணவியின் எதிர் காலத்திற்கும் படிப்பிற்கும் பாரிய பின்னடைவாக அமையும் என்பதுடன் எமது பாடசாலையின் வளர்ச்சிக்கும்  நன்மதிப்பிற்கும் பங்கம் விளைவிற்கும் என்பதை மிகவும் வருத்தத்துடன் அறியத் தருகின்றோம்.

மேற்படி விடயத்தைக் கருத்திற்கொண்டு உண்மை நிலைவரத்தை வெளிப்படுத்துமாறு கேட்டுக் கொள்கின்றேன் என அவர் அனுப்பிய செய்திக்குறிப்பில் குறிப்பிட்டுள்ளார்.


இன்றைய ராசிபலன் - 22.03.2019

இன்றைய ராசிபலன் - 22.03.2019


மேஷம்: குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்று வீர்கள். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். வெளியூர் பயணங்களால் மகிழ்ச்சி தங்கும். அரசால் அனுகூலம் உண்டு. வாகன வசதிப் பெருகும். வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களை தேடுவீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும்படி நடந்துக் கொள்வீர்கள். அமோகமான நாள்.


ரிஷபம்: வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறைவேறும். பிள்ளைகளால் தனித்திறமைகளை கண்டறிவீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். புதுப் பொருள் சேரும். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்யோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். கனவு நனவாகும் நாள்.மிதுனம்: நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள். புது வேலை கிடைக்கும். தாய்வழி உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள்வந்து  நீங்கும். பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். தொழிலில் லாபம் அதிகரிக்கும். உத்யோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். கடினமாக உழைத்து முன்னேறும் நாள்.கடகம்: குடும்பத்தினருடன் கலந்தாலோசித்து பழைய பிரச்சனைகளுக்கு முக்கிய தீர்வு காண்பீர்கள். திடீர் முடிவுகள் எடுப்பீர்கள். சொத்து வாங்குவது குறித்து யோசிப்பீர்கள். உறவினர்கள் மதிப்பார்கள். வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. உத்யோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். வெற்றிக்கு வித்திடும் நாள்.சிம்மம்: கணவன்-மனைவிக்குள் மனம் விட்டு பேசுவீர்கள். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். விலை உயர்ந்த ஆபரணம் வாங்குவீர்கள். வியாபாரத்தில் ஆர்வம் பிறக்கும். உத்யோ
கத்தில் உங்களின் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். அதிரடி மாற்றம் உண்டாகும் நாள்.கன்னி: ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் எந்த காரியத்தை தொட்டாலும் இரண்டு, மூன்றுமுறை முயன்று முடிக்க வேண்டிய  சூழ்நிலை  உருவாகும். உறவினர், நண்பர்களின் பேச்சும், செயல்பாடுகளும் உங்களுக்கு பிடிக்காமல் போகும். நீங்கள் நகைச்சுவைக்காக சொல்ல கூடிய சில கருத்துக்கள் கூட சீரியசாக வாய்ப்பிருக்கிறது. வியாபாரத்தில் அலைச்சல் இருக்கும்.துலாம்: திட்டமிட்டவை தாமதமாகும். பிள்ளைகளை அன்பால் அரவணைத்துப் போங்கள். பணப்பற்றாக்குறையை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். உடல் நலத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் பாக்கிகளை போராடி வசூலிப்பீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரியை அனுசரித்துப் போங்கள். அலைச்சலுடன் ஆதாயம் தரும் நாள்.


விருச்சிகம்: குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். மனதிற்கு இதமான செய்தி வரும். பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். புதுத் தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி அடையும். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். உற்சாகமான நாள்.


தனுசு: தவறு செய்பவர்களை தட்டிக் கேட்பீர்கள். உடன்பிறந்தவர்களால் உதவிகள் உண்டு. உங்களால் வளர்ச்சியடைந்த சிலரை இப்பொழுது சந்திக்க நேரிடும். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். வியாபாரம் தழைக்கும். உத்யோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும். மதிப்புக் கூடும் நாள்.


மகரம்: குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தருவீர்கள். நட்பு வட்டம் விரியும். வியாபாரத்தில் புது முதலீடு செய்வீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவுக் கிட்டும். புத்துணர்ச்சி பெருகும் நாள்.கும்பம்: சந்திராஷ்டமம் நீடிப்பதால் சின்ன சின்ன அவமானங்கள், மனக்கலக்கங்கள் வந்துப் போகும். உறவினர், நண்பர்களைப் பகைத்துக் கொள்ளாதீர்கள். விமர்சனங்களை கண்டு அஞ்சாதீர்கள். அநாவசியமாக மற்றவர்கள் விஷயத்தில் தலையிட வேண்டாம். வியாபாரத்தில் எதிர்பார்த்த பணம் தாமதமாக வரும். உத்யோகத்தில் முக்கிய முடிவுகளை தவிர்ப்பது நல்லது. முன்கோபத்தை தவிர்க்க வேண்டிய நாள்.மீனம்: தன்னம்பிக்கையுடன் எதையும் செய்யத் தொடங்குவீர்கள். பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுக் கொள்வார்கள். மனைவிவழியில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வாகனத்தை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் புது வேலையாட்கள் அமைவார்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் முன்வைத்த கோரிக்கைகள் நிறைவேறும். நன்மை கிட்டும் நாள்.Thursday, March 21, 2019

திருடப்பட்ட நகைகளுடன் யாழில் சந்தேக நபர் கைது!

திருடப்பட்ட நகைகளுடன் யாழில் சந்தேக நபர் கைது!


யாழ்ப்பாணம் – மாதகலில் வீடொன்றினை உடைத்து சுமார் 15 பவுண் தங்க நகைகளைத் திருடிய சந்தேக நபரை யாழ் நகரில் வைத்து கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபரிடமிருந்து திருட்டுப்போன நகைகள் சிலவும் திருட்டு நகை ஒன்றை நிதி நிறுவனத்தில் அடகு வைத்து பெற்றுக்கொண்ட 37 ஆயிரத்து 500 ரூபாய் பணமும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மாதகல் நாவலர் வீதியில் அமைந்துள்ள வீடொன்று நேற்று (புதன்கிழமை) காலை உடைக்கப்பட்டு சுமார் 15 பவுண் தங்க நகைகள் திருட்டுப் போயிருந்தன. வீட்டிலுள்ளவர்கள் ஆலயத்துக்குச் சென்றிருந்த போதே இந்த திருட்டுச் சம்பவம் இடம்பெற்றது.

இதுதொடர்பாக இளவாலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து யாழில் சந்தேகத்திற்கிடமான வகையில் நடமாடிய ஒருவரை யாழ்ப்பாணம் சிறப்பு குற்றத்தடுப்புப் பிரிவினர் விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.

சந்தேகநபரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் மாதகல் பகுதியில் திருடப்பட்ட நகைகளை அடகுவைக்க யாழ்ப்பாண நகருக்கு வந்ததாக தெரிவித்த சந்தேகநபர், திருட்டு நகைகளின் ஒரு பகுதியை பொலிஸாரிடம் வழங்கினார்.

அத்துடன், சுமார் ஒரு பவுண் நிறையுடைய நகையை யாழ்ப்பாணத்திலுள்ள நிதி நிறுவனம் ஒன்றில் அடகு வைத்துப் பெற்றுக்கொண்ட 37 ஆயிரத்து 500 ரூபாய் பணமும் பற்றுச்சீட்டும் சந்தேகநபரிடமிருந்து மீட்கப்பட்டது.

இந்தநிலையில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.